England vs Sri Lanka 3rd Test Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில்,  இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG vs SL 3rd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இலங்கை
  • இடம் - கென்னிங்டன் மைதானம், லண்டண்
  • நேரம் - செப்டம்பர் 06, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs SL 3rd Test Pitch Report

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 110 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 41 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேசமயம், 29 போட்டிகளில் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன.  இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோரானது 339 ரன்களாவும், நான்காவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது வெறும் 156 ரன்களாக உள்ளது. இங்கு பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவரும் நல்ல உதவியைப் பெறுவர்கள் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ENG vs SL 3rd Test: Where to Watch?

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் நேலை ஒளிபரப்பு செய்கிறது. மேற்கொண்டு ரசிகர்கள் இத்தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம். 

Advertisement

ENG vs SL Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 38
  • இங்கிலாந்து - 19
  • இலங்கை - 08
  • முடிவில்லை - 11

England vs Sri Lanka 3rd Test Probable Playing XI

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜோஷ் ஹல், ஒல்லி ஸ்டோன், சோயிப் பஷீர்.

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: திமுத் கருணாரத்ன/பதும் நிஷங்கா, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கே), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித்த ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா, மிலன் ரத்நாயக்க

ENG vs SL 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பென் டக்கெட், ஜேமி ஸ்மித், தினேஷ் சண்டிமால்
  • பேட்ஸ்மேன்கள் - ஹாரி புரூக்
  • ஆல்ரவுண்டர்கள் - கிறிஸ் வோக்ஸ் (துணை கேப்டன்), தனஞ்சய் டி சில்வா, ஜோ ரூட் (கேப்டன்), கமிந்து மெண்டிஸ்
  • பந்துவீச்சாளர்கள் – கஸ் அட்கின்சன், ஜோஷ் ஹல், மிலன் ரத்நாயக்க

ENG vs SL 3rd Test Dream11 Prediction, ENG vs SL Dream11 Prediction, Today Match ENG vs SL, ENG vs SL Test Series, ENG vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, EdddNG vs SL Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka Tour of England, Injury Update of the match between England vs Sri Lanka

Advertisement

Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News