England vs West Indies, 1st Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (ஜூலை 10ஆம் தேதி) புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG vs WI 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
  • நேரம் - ஜூன் 10, மதியம் 3.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs WI 1st Test Pitch Report

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைப்பு கொடுக்கும் மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள சூழல் மற்றும் தட்பவெப்பம் ஆகியவை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் ஸ்விங் கிடைக்க வழிவகை செய்யும் என்பதால், புதிய பந்தை எதிர்கொள்ளும் பேட்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம் இந்த மைதானத்தின் இதுவரை நடைபெற்றுள்ள 145 டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 52 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 52 முறையும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ENG vs WI Head-to-Head Record

  • மோதிய போட்டிகள் - 163
  • இங்கிலாந்து - 52
  • வெஸ்ட் இண்டீஸ் - 59
  • முடிவில்லை/டிரா - 53

ENG vs WI 1st Test: Where to Watch?

Advertisement

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஓடிடி தளத்தில் அனுபவிக்க விரும்பினால், அவர்கள் சோனி லைவ் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி தொடரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

England vs West Indies 1st Test Probable Playing XI

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: கிரேக் பிராத்வைட் (கே), மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கெவின் சின்க்ளேர், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடாகேஷ் மோட்டி.

ENG vs WI 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜோசுவா டா சில்வா
  • பேட்டர்ஸ் - ஹாரி ப்ரூக், ஜோ ரூட், கிரேக் பிராத்வைட், ஸாக் கிரௌலி
  • ஆல்ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், கிறிஸ் வோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷமர் ஜோசப் (துணைக்கேப்டன்), அல்ஜாரி ஜோசப்

ENG vs WI Dream11 Prediction, ENG vs WI 1st Test Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs West Indies

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News