சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி!

Updated: Sun, Sep 08 2024 11:44 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

அதற்கேற்றவாரே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அனிபவ வீரர்கள் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவர்களது எதிர்காலம் முடிவடைந்துவிட்டதாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வந்ததனர். மேற்கொண்டு அவர்களது இடத்தில் அறிமுக வீரர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்துள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். தற்போது 37 வயதை எட்டியுள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் அவர் கடந்தாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 

மேலும் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதம், 15 அரைசதம் என 3094 ரன்களையும், 204 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 138 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதம், 6 சிக்ஸர்கள் என 2,355 ரன்களையும், 111 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 92 போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்களுடன் 1229 ரன்களையும், 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

 

மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 67 போட்டிகளில் விளையாடியுள்ள மொயீன் அலி 67 போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்களுடன் 1162 ரன்களையும், 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து உலகெங்கிலும் நடைபெற்றுவரும் பல்வேறு நாடுகளுடைய பிரீமியர் லீக் தொடர்களிலும் அங்கம் வகித்துவரும் மொயீன் அலி, பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மொயீன் அலி, “எனக்கு தற்போது 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம். அதனால் நான் ஓய்வு பெறுவதற்கு இதுவே நேரம் சரியானது என்று உணர்ந்தேன். இங்கிலாந்து அணிக்காக நான் என் பங்கை செய்துவிட்டேன் என்று உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை