ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்தில் நீடித்துள்ளார்.

Advertisement

மேற்கொண்டு பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 9ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இங்கிலாந்து டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர்பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் 13 இடங்கள் முன்னேறியதுடன் 10ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

அதேபோல் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன் இரண்டாம் இடத்திலும், ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். மேலும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா ஒரு இடம் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் டாப் 10 இடங்களில் எந்த இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை. 

அதேசமயம் புதுபிக்கப்பட்ட இந்த டி29 ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ரஸாவும் ஒரு இடம் பின் தங்கியதுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இந்த பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News