காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரை தவறவிடும் ஒல்லி ஸ்டோன்!

Updated: Fri, Apr 04 2025 20:31 IST
Image Source: Google

ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உண்மையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 31 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன் காயம் காரணமாக சில மாதங்கள் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் இங்கிலாந்து கோடை காலம் முழுவதும் காயத்தினால் தவறவிடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்து மற்றும் நாட்டிங்ஹாம்ஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன் இந்த வாரம் தனது வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மேற்கொண்டு அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய 14 வாரங்கள் தேவை என்பதால், அவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார். இதனால் அவர் இந்திய அணிக்கு எதிரான தொடரையும் தவறவிடுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இங்கிலாந்து அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அவர்களுடன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸும் காயத்தால் அவரும் சிகிச்சைப்  பெற்று வருவது இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்தின் பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் காயங்கள் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விலகி இருப்பதால், இப்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கயத்தால் இங்கிலாந்து அணியில் இருந்து விலகி இருந்த ஆர்ச்சர் தற்போது, ஒருநாள் மற்றும் டி20 அணியில் மட்டுமே இடம்பிடித்து விளையாடி வருகிறார். ஒருவேளை அவர் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அது அந்த அணிக்கு ஆறுதலளிக்கு.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை