இது ஒரு தனித்துவமான தொடர் - இந்திய அணியை சாடிய ஜோஸ் பட்லர்!

Updated: Wed, Feb 26 2025 10:27 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன் ஒருபகுதியாக இன்று நடைபெறும் வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லாகூரில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி மட்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் செல்லாமல், தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. ஆனால் இத்தொடரில் பங்கேற்றுள்ள மற்ற அணிகள் அனைத்தும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் நிலையில், இந்திய அணி மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் பலனை பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

இந்நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் இந்த முடிவின் காரணமாக இந்தியா அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜோஸ் பட்லர், “இதுஒரு தனித்துவமான தொடர் என்று நினைக்கிறேன். ஏனெனில் தொடரை நடத்தும் அணி தங்களுடையை போட்டியில் விளையாடுவதற்காக வேறு இடத்திற்கு சென்றுள்ளது. ஆனால் அதுகுறித்து நான் தற்போது கவலைபட வேண்டிய அவசியமில்லை. தற்போது என் கவனம் முழுவது ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராவதில் மட்டும் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் நாசர் ஹொசைன் மற்றும் மைக்கேல் ஆர்த்டன் ஆகியோரும் இந்திய அணி துபாய் மைதானத்தில் மட்டும் விளையாடுவதை விமர்சித்திருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் விமர்சித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இருப்பினும் இங்கிலாந்து வீரர்களின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் தங்கள் பதிலடியையும் கொடுத்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை