ENG vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளி (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் ஒயிட்வாஷ் செய்து அசத்தும். அதேசயம் ஒயிட்வாஷை தவிர்க்க நியூசிலாந்து அணியும் கடுமையாகா போராடும்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தொடர்கிறார்.
மேற்கொண்டு இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸிற்கு ஓய்வளிக்கப்பட்டு மேத்யூ பாட்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அணியின் விக்கெட் கீப்பராக ஒல்லி போப் தொடர்கிறார். இது தவிர்த்து ஜோ ரூட், ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தெல், சோயப் பஷீர் உள்ளிட்டோரு பிளேயிங் லெவனில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
மறுபக்கம் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் டெவான் கான்வே குழந்தை பிறப்பின் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக வில் யங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர் இடம்பிடிப்பார் என்பதால், வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர்
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து கணிக்கப்பட்ட லெவன்: டாம் லாதம் (கேப்டன்), வில் யங், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, டிம் சௌதீ, வில்லிம் ஓ ரூர்க்.