IND vs ENG, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோஸ் பட்லர் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மார்க் வுட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் என இரண்டு அதிவேக பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ஹாரி புருக், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மார்க் வுட்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி.