வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் நீக்கம்!

Updated: Mon, Jul 01 2024 12:52 IST
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் நீக்கம்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலக கிரிக்கெட் அணிகள் தங்களது அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

மேலும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இன்று அறிவித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்க தவறிவரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பென் ஃபோக்ஸ் ஆகியோருக்கு முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ஒல்லி ராபின்சன், டாம் ஹார்ட்லீ, ரெஹான் அஹ்மத், ஜேக் லீச் உள்ளிட்ட வீரர்களும் இந்த அணியில் இடம்பிடிக்கவில்லை. 

அதேசமயம் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலன் பென்னிங்டன் மற்றும் அறிமுக வீரர் ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஹாரி புரூக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், கிறிஸ் வோக்ஸ், ஜோ ரூட், ஒல்லி போப், கஸ் அட்கின்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லன் பென்னிங்டன், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், மிகைல் லூயிஸ், சக்கரி மெக்கஸ்கி, கிர்க் மெக்கென்சி, குடகேஷ் மோட்டி, கீமார் ரோச், ஜேய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் அட்டவணை

  • முதல் டெஸ்ட் போட்டி - ஜூலை 10 to ஜூலை 14 - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஜூலை 18 to ஜூலை 22 - டிரெண்ட் பிரிட்ஜ் மைதனம், நாட்டிங்ஹாம்
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி - ஜூலை 26 to ஜூலை 30 - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை