ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்! 

Updated: Tue, May 16 2023 19:48 IST
England Name Squad For Ireland Test; Bairstow Returns, Foakes Out
Image Source: Google

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 1ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை அடுத்து இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடரில் ஆட அயர்லாந்துக்கு எதிரான தொடர் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. ஆஷஸ் தொடரில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என கணிக்கவும் இந்த தொடர் முக்கியமாக பார்க்கபடுகிறது.

இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தாங்குகிறார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பேர்ஸ்டோ அணியில் இடம் பிடித்துள்ளார். அதே வேளையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெறவில்லை. 

முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆர்ச்சர் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி இங்கிலாந்து திரும்பினார். அங்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் ஆர்ச்சர், முழங்கை காயம் இன்னும் குணமடையாததால் ஆஷிஸ் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ரௌலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், கிறிஸ் வூட், மார்க் வோக்ஸ், .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை