டி20 உலகக்கோப்பை 2022: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ராய், பர்க்கின்சனுக்கு இடமில்லை!

Updated: Fri, Sep 02 2022 15:10 IST
England T20 World Cup 2022 squad: Buttler leads 15-man squad, Jason Roy out (Image Source: Google)

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம். அதேவேளையில், ரோஹித் சர்மா கேப்டன்சியில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் வலுவான பென்ச் பலத்துடன், மிகச்சிறந்த அணியாக திகழும் இந்திய அணிக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான, ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், லியாம் லிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், பில் சால்ட் போன்ற அதிரடி வீரர்களும், ஆதில் ரஷீத், மார்க் வுட், ரீஸ் டாப்லி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். 

ஆனால் அதேசமயம் ஜேசன் ராய் மற்றும் வேகப்பந்துவீச்சாள் மாத்யூ பர்க்கின்சன் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடிக்காதது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரான், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை