இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. 

Advertisement

ஆனால் பாதுகாப்பு காரணங்களினால் இத்தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து அணி அறிவித்தது. மேலும் நியூசிலாந்து அணியைத் தொடர்ந்து இங்கிலாந்து அதே காரணத்தைக் காட்டி தொடரை ரத்து செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

Advertisement

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட அத்தொடரானது அடுத்தாண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் கூடுதல் போட்டிகள் கொண்ட டி20 தொடராக நடத்தப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பேசிய இசிபி தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிசன்,“நானும் இசிபியின் மூத்த இயக்குனர் மார்ட்டின் டார்லோவும் லாகூருக்கு சென்று, கடந்த சில வாரங்களாக நடந்த சில விஷயங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். 

இந்த பேச்சுவார்த்தையில் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்தும், எதிர்கால உறவு குறித்தும் விவாதித்தோம். அதன்படி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கூடுதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

Also Read: T20 World Cup 2021

Advertisement

மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டெஸ்ட் தொடரிலும் நாங்கள் விளையாட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News