இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Jul 08 2022 18:19 IST
England vs India, 2nd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிரது. 

இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
  •     இடம் - எட்ஜ்பஸ்டன், பர்மிங்ஹாம்
  •     நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது. அதிலும் ஹர்த்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தியது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

மேலும் இரண்டாவது போட்டியிலிருந்து விராட் கோலி, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் உள்ளிட்ட வீரர்களும் அணிக்கு திரும்புவார்கள் என்பதால், நிச்சயம் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

மேலும் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுவருவதால் நிச்சயம் எதிரணிக்கு மீண்டும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது. அதிலும் ஜேசன் ராய், மொயீன் அலி, டேவிட் மாலன் ஆகியோர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் சாம் கரண், கிறிஸ் ஜோர்டன், பர்க்கின்சன் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அது இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 20
  •     இந்தியா வெற்றி - 11
  •     இங்கிலாந்து வெற்றி -9

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜோஸ் பட்லர் (கே), ஜேசன் ராய், பிலிப் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், மொயின் அலி, டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, மேத்யூ பார்கின்சன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ்.

இந்தியா - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி/தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்/ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர்
  • பேட்டர்ஸ் - டேவிட் மாலன், லியாம் லிவிங்ஸ்டோன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா/விராட் கோலி
  • ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரித் பும்ரா, கிறிஸ் ஜோர்டன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை