ENG vs IND,5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Sep 09 2021 14:44 IST
England vs India, 5th Test – Cricket Match Prediction, Fantasy XI Tips, Weather Forecast & Probable (Image Source: Google)

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்திய அணி இரண்டில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.

இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் பின் தங்கி இருந்து பெற்ற வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கடைசி டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன்பு 3 தடவை இந்தியா டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. 1971இல் அஜித் வடேகர் தலைமையிலான அணி 1-0 (3 டெஸ்ட்) என்ற கணக்கிலும், 1986இல் கபில்தேவ் தலைமையிலான அணி 2-0 (3) என்ற கணக்கிலும், 2007ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட் தலைமையில் 1-0 என்ற கணக்கிலும் (3) கைப்பற்றி இருந்தது.

14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

இந்தியா

இந்திய அணியின் பேட்டிங்கில் தற்போது ரகானே மட்டுமே மோசமான நிலையில் உள்ளார். இதனால் அவர் இந்த டெஸ்டில் நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றி அணி என்பதால் கோலி அதில் மாற்றம் செய்ய மாட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது.

அஸ்வினுக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் அதிகமாக எழுந்து வருகிறது. ஒருவேளை அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ஜடேஜா நீக்கப்படலாம்.

ரோகித்சர்மா ஒரு சதம், 2 அரை சதத்துடன் 368 ரன்னும், ராகுல் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 315 ரன்னும் எடுத்து உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா 18 விக்கெட்டும், சிராஜ் 14 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

இங்கிலாந்து 

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்துஅணிக்கு இந்தடெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. டிரா செய்தாலோ, தோற்றாலோ தொடரை இழந்து விடும். இதனால் தொடரை சமன் செய்ய அந்தஅணி வீரர்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.

ஜோரூட் 3 சதம், ஒரு அரை சதத்துடன் 564 ரன்கள் குவித்து உள்ளார். அவர் ஒருவரே அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஜோஸ் பட்லர், ஜேக் லீச் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலத்தை அளித்துள்ளது. 

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்
இரு அணிகளும் நாளை மோதுவது 130ஆவது டெஸ்ட் ஆகும். இதில் இந்தியா 31 போட்டிகளிலும், இங்கிலாந்து 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 50 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 

உத்தேச அணி
இங்கிலாந்து -
ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோ / ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரேக் ஓவர்டன்/ மார்க் வூட், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்தியா - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா/ ஹனுமா விஹாரி, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே/ ஆர் அஸ்வின், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்/ முகமது ஷமி.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், ஜோஸ் பட்லர்
  • பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, விராட் கோலி, டேவிட் மாலன், ஜோ ரூட்
  • ஆல் -ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, கிறிஸ் வோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, ஒல்லி ராபின்சன்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை