பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது. 

இதற்கிடையில் இலங்கை தொடரில் விளையாடிய 3 இங்கிலாந்து வீரர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த அணியும் மருத்துவர் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து காயம் காரணமாக ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸை புதிய கேப்டனாக கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 9 அறிமுக வீரர்கள் விளையாடவுள்ளனர். 

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள்: இங்கிலாந்து vs பாகிஸ்தான்
  •     இடம் : சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்
  •     நேரம் : மாலை 5.30 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. ஆனால் தற்போது மொத்த அணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான பரிச்சையமில்லாத அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 

அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜேம்ஸ் வின்ஸ், ஜேக் பால், ஜாக் கிரௌலி ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் பந்துவீச்சில் பில் சால்ட், மாட் பர்கின்சன் ஆகியோர் எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதுவாக இருப்பினும் பாகிஸ்தான் போன்ற பலமான அணியுடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இளம் இங்கிலாந்து அணி வெல்வது சற்று கடினமே.

பாகிஸ்தான் 

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக் என அதிரடி பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. 

அதற்கேற்றார் போல் பந்துவீச்சில் ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கும் விதமாக உள்ளது.

இரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள், அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  •     மோதிய ஆட்டங்கள் - 88
  •     பாகிஸ்தான் வெற்றி - 32
  •     இங்கிலாந்து வெற்றி - 53
  •     முடிவில்லை - 3

உத்தேச அணி

இங்கிலாந்து - பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேக் பால், ஜாக் கிராலி, பென் டக்கெட், லூயிஸ் கிரிகோரி, டான் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், மாட் பார்கின்சன், பில் சால்ட்.

பாகிஸ்தான் - இமாம்-உல்-ஹக், ஃபகர் ஸமான், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், சோஹைப் மக்சூத், முகமது நவாஸ், சதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் காதிர், ஹரிஸ் ரவூஃப்

ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், பென் டக்கெட்
  •     பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம், சோஹைப் மக்சூத், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் மாலன்
  •     ஆல்ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ், சதாப் கான்
  •     பந்து வீச்சாளர்கள் - ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஜேக் பால்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News