இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Mon, Sep 01 2025 21:06 IST
Image Source: Google

England vs South Africa 1st ODI Match Prediction: தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான் முதல் ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய கையோடும், இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய கையோடும் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

ENG vs SA 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் -  ஹெடிங்லே கிரிக்கெட் மைதானம், லீட்ஸ்
  • நேரம்- செப்டம்பர் 2, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Headingley, Leeds Pitch Report

லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 48 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன, அவற்றில் 19 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 26 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 228 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த 351/9 ஆகும்.

ENG vs SA ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 71
  • தென் ஆப்பிரிக்கா - 35
  • இங்கிலாந்து- 30
  • டிரா- 05
  • முடிவில்லை- 01

ENG vs SA 1st ODI : Where to Watch?

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காண முடியும்.

ENG vs SA 1st ODI: Player to Watch Out For

ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஹாரி புரூக் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையாக உள்ளனர். இதனால் அனைவரின் பார்வையும் அந்த அணியின் இந்த ஐந்து வீரர்கள் மீது இருக்கும். தென் ஆப்பிரிக்காவைப் பற்றிப் பேசினால், ஐடன் மார்க்ராம், டெம்பா பவுமா, மேத்யூ பிரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் தங்கள் செயல்திறனால் எதிரணியை அழுத்தத்தில் தள்ள முடியும்.

England vs South Africa 1st ODI Probable Playing XI

தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.

England vs South Africa Today's Match Prediction

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் மிகவும் சமநிலையான அணிகள். இருப்பினும், இங்கிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் உள்ள சூழ்நிலையின் சாதகத்தைப் பெறும், ஏனெனில் அவர்கள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணிகளாக இருப்பார்கள்.

Also Read: LIVE Cricket Score

ENG vs SA 1st ODI Match Prediction, ENG vs SA Pitch Report, Today's Match ENG vs SA, ENG vs SA Prediction, ENG vs SA Predicted XIs, Cricket Tips, ENG vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs South Africa

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை