இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (ஜூன் 23) கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : இங்கிலாந்து vs இலங்கை 
  • மைதானம்: சோபியா கார்டன், கார்டிஃப்
  • நேரம் : இரவு 10.30 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

Advertisement

அதிலும் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் இணை சமீப காலமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டேவிட் மாலன் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். 

அதேபோல் ஈயன் மோர்கன், மோயின் அலி, சாம் கரண் என பல டி20 ஸ்பெஷலிஸ்டுகளும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை பலம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. 

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அதில் ரஷித் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பதும் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

இலங்கை

குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி சமீப காலமாக சரிவர விளையாடமல் தோல்வியை தழுவி வருகிறது. இருப்பினும் குணதிலக, ஹசரங்கா, குசால் மெண்டிஸ் என சிறப்பான பேட்டிங் வரிசையை இலங்கை அணி பெற்றுள்ளது. 

பந்துவீச்சில் இசுரு உதானா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் எதிரணிக்கு சற்று நெருக்கடியை கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

இருப்பினும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி எச்சிரமமும் இன்றி இலங்கை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்க: 9
  • இலங்கை வெற்றி : 4
  • இங்கிலாந்து வெற்றி: 5

உத்தேச அணி

Advertisement

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஈயன் மோர்கன் (கே), கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், சாம் பில்லிங்ஸ், அடில் ரஷீத், மார்க் வூட்.

இலங்கை - தனுஷ்கா குணதிலக, பாதும் நிசங்கா, குசுல் பெரேரா (கே), தாசுன் ஷானகா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்சய் டா சில்வா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், துஷ்மந்தா சமீரா.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், குசல் பெரேரா
  • பேட்ஸ்மேன்கள் - ஜேசன் ராய், டேவிட் மாலன், தனுஷ்கா குணதிலகா
  • ஆல்ரவுண்டர்கள் - மோயின் அலி , சாம் கரண், வாணிந்து ஹசரங்கா
  • பந்து வீச்சாளர்கள் - கிறிஸ் ஜோர்டான், இசுரு உதனா
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News