ENG vs SL, Test: இங்கிலாந்து அணிக்கு தொடரும் பின்னடைவு; மேலும் ஒரு ஆல் ரவுண்டருக்கு காயம்!

Updated: Tue, Aug 13 2024 15:03 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி சொந்த மண்ணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.  அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியும் இங்கிலாந்து சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆனால்  இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுன.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடிய நிலையில், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது பென் ஸ்டோக்ஸ் காயமடைந்து போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு காயம் தீவிரமாக இருப்பதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேற்கொண்டு அவர் இலங்கை தொடரிலும் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதன்படி தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிக்காக விளையாடிவந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தற்போது பர்மிங்ஹாம் ஃபினீக்ஸ் அணியும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளது. 

மேற்கொண்டு கிறிஸ் வோக்ஸின் காயம் தீவிரமடையும் பட்சத்தில் அவர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகக்கூடும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் காயத்தை சந்தித்துள்ளது அணிகு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::