EN-W vs IN-W 2nd T20I: ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அமஞ்சோத் கவுர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. 

Advertisement

இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது.இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா 3 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 13 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அமஞ்சோத் கவுர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்சோத் கவுர் 9 பவுண்டரிகளுடன் 63 ரன்களையும், ரிச்சா கோஷ் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் சோஃபியா டங்க்லி, டேனியல் வைட் ஆகியோர் ஒரு ரன்னிலும், கேப்டன் நாட் ஸ்கைவர் 13 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடி வந்த பியூமண்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 54 ரன்னில் பியூமண்ட் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஏமி ஜோன்ஸ் 32 ரன்னிலும் என விக்கெட்டுகளை கைப்பற்றினர். இறுதியில் சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்னில் ரன் அவுட்டானார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News