ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதில் நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

Advertisement

இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய மகளிர் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் வாய்ப்பையும் அதிகரிக்கும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இங்கிலாந்து அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் 2 ஓவர்கள் பந்துவீச அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கள நடுவர்களும் அதனை உறுதிசெய்தனர், 

Also Read: LIVE Cricket Score

இதையடுத்து இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் உள்பட பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அனைத்து வீராங்கனைகளுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் ஐசிசியின் இந்த அபராதத்தை இங்கிலாந்து கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டததாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News