இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த  நான்கு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் டேனியல் வையர் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மையா பௌச்சர் 13 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 16 ரன்கள் சேர்த்ததுடன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலிஸ் கேப்ஸியும் 25 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திலும், மறுபக்கம் களமிறங்கிய ஏமி ஜோன்ஸ் 11 ரன்களுக்கும், சார்லி டீன் 24 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீதர் நைட் 46 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து மகளிர் அணி தரப்பில் ஃபிரன் ஜோனஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணிக்கும் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜார்ஜியா பிலிம்மர் 8 ரன்களுக்கும், சூஸீ பேட்ஸ் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமெலியா கெர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் சோஃபி டிவைன் 13 ரன்களிலும், புரூக் ஹாலிடே 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமெலியா கெர் 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் லௌரன் பெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. முன்னதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து மகளிர் அணி முழுமையாக கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணியை முழுமையாக ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News