ரோஹித்தின் ஃபிட்னஸ் கவலையளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!

Updated: Sat, Jan 01 2022 21:10 IST
Image Source: Google

டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது என்பதால், ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட இருந்தார். ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ரோஹித் சர்மா, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. அதனால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.

இந்திய அணியின் முக்கியமான வீரர் மட்டுமல்லாது, இப்போது கேப்டனாகவும் உருவெடுத்துள்ள ரோஹித் சர்மா, காயத்தால் நிறைய போட்டிகளை தவறவிடுவது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என தொடர்ச்சியாக பல கிரிக்கெட் தொடர்களில் காயம் காரணமாக ஆடமுடியாமல் தவிக்கிறார் ரோஹித் சர்மா. இது பெரிய பிரச்னை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “ரோஹித் சர்மா காயத்தால் ஆடாதது மிகப்பெரிய செய்தி. இது மிகப்பெரிய பிரச்னையும் கூட. அவர் காயத்தால் நிறைய போட்டிகளை தவறவிடுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளை ரோஹித் தவறவிட்டார். 

அதன்பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக பயிற்சியின்போது காயமடைந்தார். 3 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இப்போது ஒருநாள் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இது இந்திய அணிக்கு பெரும் பிரச்னை. ரோஹித் சர்மாவும் பிசிசிஐயும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை