தோனியின் 41ஆவது பிறந்தநாள் இன்று. 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் ஆடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

Advertisement

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்தவர் தோனி. இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு செய்து கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக திகழ்பவர் தோனி.

Advertisement

கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தோனி. சினிமா நடிகர்களைவிட ஒரு படி அதிகமாக கொண்டாடப்படுபவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார்.

தோனியின் 41ஆவது பிறந்தநாள் இன்று. தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மனைவி மற்றும் மகளுடன் தோனி லண்டனுக்கு சென்றுள்ளார். தோனி அவரது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினாலும், அவரது ரசிகர்கள் இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடிவருகின்றனர்.

தோனியின் 41ஆவது பிறந்தநாளையொட்டி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள், 41 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து கொண்டாடுகின்றனர். 2011 உலககோப்பையில் தோனி அடித்த ஃபேமஸான வின்னிங் ஷாட் ஸ்டில்லை கட் அவுட்டாக வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

இந்தியாவில் சினிமா பிரபலங்களுக்கு கட் அவுட் வைப்பது வழக்கம். ஆனால் சினிமா பிரபலங்களின் கட் அவுட்டை விட உயரமான, தரமான கட் அவுட்டை செய்து தரமான சம்பவம் செய்துள்ளனர் தோனி ரசிகர்கள்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News