அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் சித்தார்த் கௌல்!

Updated: Thu, Nov 28 2024 22:23 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் சித்தார்த் கௌல். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சித்தார்த் கௌல் தலா 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 22அம் ஆண்டு வரை 55 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

இதுதவிர்த்து 88 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ள சித்தார்த் கௌல் 297 விக்கெட்டுகளையும், 111 லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளையும், 145 டி20 போட்டிகளில் விளையாடி 182 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் அண்டர்19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். 

மேலும் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையடியுள்ளார். அதிலும் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் அணியின் தவிர்க்க முடியத பந்துவீச்சாளராகவும் இருந்தார். அதனைத்தவிர்த்து கடந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப் அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது 35 வயதை எட்டியுள்ள சித்தார்த் கௌல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வந்த சித்தார்த் கௌல், அதன்பின் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடமால் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பேசிய சித்தார்த் கௌல், “தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனது வாழ்க்கையின் அனைத்து உயர்வு தாழ்வுகளிலும் நான் பெற்ற அன்புக்கும் ஆதரவிற்கும் எனது நன்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல் விரும்புகிறேன். மேலும் எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் என்னுடையை நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். 

குறிப்பாக காயங்கள் மற்றும் என்னுடைய தாழ்வுகளின் போது எனக்காக என்னுடன் நின்ற எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், எனது சக அணி வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் எனது நன்ற்கள். மேலும் 2008 ஆம் ஆண்டு அண்டர்19 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2018 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு வழங்கிய பிசிசிஐக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் உரிமையாளர்கள் எனக்கு வாழ்நாள் நினைவுகளை அளித்ததற்காகவும், 2007ஆம் ஆண்டு எனது முதல் தேர்வில் இருந்து எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எனக்கு ஆதரவளித்த பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திற்கும் என்னுடையை நன்றியை கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை