ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிசங்கா, தினேஷ் சண்டிமல், கமிந்து மெண்டிஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - தசுன் ஷானகா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ 83 ரன்களையும், தசுன் ஷானகா 51 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் முகமது நதீம் - நசீம் குஷி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 19 ரன்களில் ஓமனை வீழ்த்தி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News