SL vs PAK, 2nd Test: சந்திமால், ஃபெர்னாண்டோ அரைசதம்; வலிமையான நிலையில் இலங்கை!

Updated: Sun, Jul 24 2022 21:08 IST
Fifties From Chandimal & Oshada Put Sri Lanka On Track To 400 In 2nd Test Against Pakistan (Image Source: Google)

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாதா ஃபெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் இறங்கினர். இதில் பொறுப்புடன் விளையாடிய ஃபெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் கருணரத்னே 40 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100ஆவது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

4ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்த நிலையில், மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரைசதம் கடந்ததிருந்த தினேஷ் சண்டிமால் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 ரன்னில் வெளியேறினார். 

இதையடுத்து இறங்கிய தன்ஞ்செய டி சில்வா 33 ரன்னில் அவுட்டானார். இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 2விக்கெட் வீழ்த்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை