பயிற்சி ஆட்டம்: ராகுல், சூர்யா அரைசதம்; ஆஸிக்கு 187 டார்கெட்!

Updated: Mon, Oct 17 2022 11:15 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரி எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. அதன்படி இன்று பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்கொள்கிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினார். 

ஒரு முனையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு ரன்களைக் கூட எடுக்காத பட்சத்தில் மறுமுனையில் கேஎல் ராகுல் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 57 ரன்களில் ராகுல் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா 15 ரன்னிலும், விராட் கோலி 19 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 20 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங் கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை