Birmingham Test: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் கேல் ராகுல் 2 ரன்னிலும், கருண் நயர் 31 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்திருந்தது. இதையாடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஷுப்மன் கில் இரட்டை சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் சதத்தை நெருங்கிய ரவீந்திர ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் ஷுப்மன் கில்லும் 269 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கி வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹாரி புரூக் 30 ரன்களுடனும், ஜோ ரூட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை ஆகாஷ் தீப் வீசிய நிலையில் ஓவரின் 4ஆவது பந்தில் பென் டக்கெட்டும், 5ஆவது பந்தில் ஒல்லி போப்பும் என அடுத்தாடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் ஆகாஷ்  தீப் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

England Playing XI : ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

Advertisement

Also Read: LIVE Cricket Score

India Playing XI : கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், நிதீஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News