மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ம்ற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஜார்ஜியா வெர்ஹாம் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழபிற்கு 199 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53 ரன்களையும், எல்லிஸ் பேர்ரி 49 ரன்களையும், ரிச்சா கோஷ் 36 ரன்களையும், ஜார்ஜியா வெர்ஹாம் 31 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 69 ரன்களையும், சஜீவன் சாஜனா 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்  இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிர்னட் தவறவிட்டது அட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை அமன்ஜோத் கவுர் வீசிய நிலையில், அந்த ஓவரின் 3ஆவது பந்தை எதிர்கொண்ட எல்லிஸ் பெர்ரி மிட் ஆஃப் திசையில் சிக்ஸர் அடிக்க நினைத்து பந்தை தூக்கி அடித்தார். 

அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த  நாட் ஸ்கைவர்-பிரண்ட் கைக்கு வந்த எளிதான கேட்ச்சை தவறவிட்டார். அதிலும் குறிப்பாக அவர் அந்த பந்தை தவறவிட்டதற்கு மைதானத்தின் மின் விளக்குகளே காரணம் என்பது போல் சகையையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் எல்லிஸ் பெர்ரியின் கேட்ச்சை தவறவிட்ட நாட் ஸ்கைவர் பிரண்டின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட எல்லிஸ் பெர்ரி, அடுத்த சில பந்துகளில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார். இதன் மூலம் அந்த ஓவரில் மொத்தமாக 18 ரன்களையும் விளாசினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களைச் சேர்த்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News