ZIM vs IND, 3rd ODI: ஷுப்மன் கில்லை பாராட்டிய கேஎல் ராகுல்!

Updated: Tue, Aug 23 2022 12:09 IST
From KL Rahul's return to Shubman Gill's consistency (Image Source: Google)

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி 'ஒயிட்வாஷ்' செய்தது. ஹராரேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது.

3ஆவது வீரராக களம் இறங்கிய சுப்மன்கில் 97 பந்தில் 130 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும். அவர் ஜிம்பாப்வேயில் அதிக ரன் எடுத்து தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். இஷான்கிஷன் 50 ரன்னும், ஷிகர் தவான் 40 ரன்னும், எடுத்தனர். இவான்ஸ் 5 விக்கெட்டும், விக்டர், லுகே ஜான்வே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 276 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியை விட இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வீரரகள் சிறப்பாக செயல்பட்டனர். அந்த அணி போராடியே தோற்றது.

சிக்கந்தர் ராஸா சதம் அடித்தார். அவர் 95 பந்தில் 115 ரன் எடுத்தார். அவருக்கு அடுத்தப்படியாக சீயன் வில்லியம்ஸ் 45 ரன்னும் , இவான்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். அவேஷ்கான் 3 விக்கெட்டும், தீபக்சாஹர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்தது. முதல் ஆட்டத்தில் 10 விக்கெட்டிலும், 2-வது போட்டியில் 5 விக்கெட்டிலும் அபாரமாக வென்று இருந்தது. ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று உள்ளது.

இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல், “இந்த ஆட்டத்தில் நாங்கள் நெருக்கடி அடைந்தோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ராசாவும், இவான் சும் சிறப்பாக ஆடி ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்றனர். அவர்கள் எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக வும், சோதனையாகவும் இருந்தனர்.

சுப்மன்கில் இந்த தொடர் முழுவதும் நன்றாக பேட்டிங் செய்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஐ.பி.எல். தொடரிலும் அவர் நன்றாக செயல்பட்டார். அவர் பேட்டிங் செய்யும் விதம் கண்ணுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடர் அடுத்த தொடருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நான் சுமார் 150 ஓவர்கள் பீல்டிங் செய்துள்ளேன். உடல் நன்றாக இருக்கிறது.

நாங்கள் சில யோசனைகளுடன் இங்கு வந்தோம். சில ஆட்டங்களை பயன்படுத்த விரும்புனோம். சிலருக்கு சில காலமாக வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். இந்த தொடரில் சுப்மன்கில் 3 ஆட்டத்தில் 1 சததம், ஒரு அரை சதத்துடன் 245 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை