தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை!

Updated: Mon, Jan 22 2024 13:43 IST
தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை! (Image Source: Google)

சமீபத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி தங்களுடையை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் வரும் பிப்ரவரி மாத 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு சில சர்ச்சைகளை கிளப்பியது. காரணம் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளைடாடிவருவதன் காரணமாக நிறைய அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவிற்க்கு முன் உதாரணமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பாகிஸ்தான் தொடரின் போது காயமடைந்து தொடரிலிருந்து விலகிய கேப்டன் கேன் வில்லியம்சன் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்னதாக நிச்சயம் கேன் வில்லியம்சன் உடற்தகுதியை எட்டுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கேன் வில்லியம்சன் நிச்சயம் இத்தொடரில் விளையாடுவார் என நம்புகிறேன். மேலும் அவர் இன்னும் ஒருசில நாட்களில் முழு உடற்தகுதியை எட்டி பயிற்சிக்கு திரும்புவார். இது எங்களுக்கு ஒரு நல்ல விஷயம். நாங்கள் வரவிருக்கு மிக்கியமான தொடருக்கு அவரை தயார்படுத்தி வருகிறோம். ஏனெனில் அவர் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அதனால் நங்காள் அவருக்கு தேவையான நேரத்தையும் வாய்ப்பையும் நாங்கள் வழங்கிவருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் பிளெண்டல் கடந்தாண்டு வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்தார். அவர் இத்தொடருக்கு முன்னதாக உடற்தகுதியை எட்டிவிட்டால் நிச்சயம் இத்தொடரில் விளையாடுவார். ஒருவேளை அவர் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் அறிமுக வீரர்கள் கேம் பிளெட்சர் மற்றும் டேன் கிளீவர் ஆகியோரும் எங்களது தேர்வில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை