பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த சுனில் கவாஸ்கர்!

Updated: Sun, Sep 01 2024 20:00 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற கருத்துகளை ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அண்யின் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தவரிசையில் தற்சமயம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான சுனில் கவாஸ்கரும் இணைந்துள்ளார். மேற்கொண்டு எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்றும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இரு அணியிலும் அபார திறமை கொண்ட வீரர்கள் இருப்பதால் நிச்சயம் இது ஒரு அற்புதமான தொடராக இருக்கும் என நினைக்கிறேன். மேலும், கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் ஏன் அனைவருக்கும் பிடித்தமாக உள்ளது ஏன்? என்பதை இந்த தொடர் காட்டும். அதேபோல் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றும்.

ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் இந்திய அணியானது சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்மூலம் கடினமான சுற்றுப்பயணத்திற்குத் தேவையான ஆற்றலையும், அனுபவத்தையும் இப்போட்டிகள் மூலம் பெற முடியும். ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள், முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு தங்களது மன விளையாட்டுகளை தொடங்கிவிட்டன.

Also Read: Funding To Save Test Cricket

அதிலும் கிளென் மெக்ராத் போன்று ஆஸ்திரேலியா இத்தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை க்ளீன் ஸ்வீப் செய்யும் என்று கூறவில்லை என்றாலும், ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று அவர்கள் இன்னும் பரிந்துரைக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ரவி சாஸ்திரியைத் தவிர வேறு எந்தவொரு முன்னாள் அல்லது தற்போதைய வீரர்கள் யாரும் ஆஸ்திரேலியர்களின் இந்த கருத்து கணிப்புகளுக்கு பதிலளிக்கவில்லை” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை