England vs Australia, 3rd T20, Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG vs AUS: Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
  • நேரம் - செப்டம்பர் 15, இரவு 11 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs AUS: Live Streaming Details

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும். 

ENG vs AUS: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 26
  • ஆஸ்திரேலியா - 12
  • இங்கிலாந்து - 12
  • முடிவில்லை - 02

ENG vs AUS: Pitch Report

Advertisement

இந்தப் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 13 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 6 முறை இரண்டாவதாகபேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 154 ரன்கள். இந்த மைதானத்தில் சர்வதேச டி20 போட்டியில் 199 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

England vs Australia Possible Teams

ஆஸ்திரேலியா உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Advertisement

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ஜோர்டான் காக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், சாம் கரன், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், ரீஸ் டாப்லி.

ENG vs AUS 3rd T20I: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - பில் சால்ட், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஜேக்கப் பெத்தேல்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன் (கேப்டன்), சாம் கரன்
  • பந்துவீச்சாளர்கள்- சீன் அபோட், பிரைடன் கார்ஸ்.

ENG vs AUS Dream11 Prediction, ENG vs AUS 3rd T20, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News