நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரெலிய மகளிர் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலிய மகளிர் அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கிய, டிசம்பர் 23ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளுல் வெலிங்டனில் உள்ள பெசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனாக அலிஸா ஹீலி செயல்படவுள்ள நிலையில், இந்திய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜியா வொல் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். மேற்கொண்டு தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், எல்லிஸ் பேர்ரி, மேகன் ஷாட், பெத் மூனி, அனபெல் சதர்லேண்ட் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய மகளிர் அணி: அலிசா ஹீலி (கே), தஹ்லியா மெக்ராத், டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்
Also Read: Funding To Save Test Cricket