மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல்; வைரல் காணொளி!

Updated: Sat, Jul 20 2024 13:50 IST
Image Source: Google

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்த நிலையில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் கல்வின் சாவெஜ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வாஷிங்டன் அணி தரப்பில் ரச்சின் ரவிந்திரா 4 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்தார். அதிலும் குறிப்பாக இவர் அடித்த ஒரு சிக்ஸர் ஒன்று தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Washington Freedom (@wshfreedom)

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்படி இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை சூப்பர் கிங்ஸ் தரப்பில் முகமது மொஹ்சின் வீச அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கிளென் மேக்ஸ்வெல் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார். அதன்படி லங் ஆன் மேல் கிளென் மேக்ஸ்வெல் அடித்த அந்த சிக்ஸரானது மைதானத்தின் வெளியே சென்று விழுந்தது. இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் அடித்த இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை