மேக்ஸ்வெல் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!

Updated: Fri, Jul 26 2024 14:48 IST
Image Source: Google

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குவாஃபையர் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், கோரி ஆண்டர்சன் தலைமையில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹசன் கான் மற்றும் கெப்டன் கோரி ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் கான் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹசன் கான் 57 ரன்களைச் சேர்த்தார். வாஷிங்டன் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியிலும் ஸ்டீவ் ஸ்மித், ஆண்ட்ரிஸ் கஸ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - கிளென் மேக்ஸ்வெல் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம், வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களையும்,  கிளென் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 54 ரன்களையும் சேர்த்தனர். இந்நிலையில் இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் அடித்த சிக்ஸர் ஒன்றானது 103 மீட்டருக்கு சென்றது. இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் விளாசிய இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை