ஷுப்மன் கில்லை பாராட்டிய விராட் கோலி!

Updated: Tue, May 16 2023 13:11 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில்  குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 56 பந்தில் சதம் அடித்து தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். இந்த வருடம் அவருக்கு மிகவும் சிறப்பான ஒரு வருடமாக இருந்து வருகிறது. இந்திய மண்ணில் சதம் அடித்தார். அடுத்து ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்தார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்தார். தற்பொழுது ஐபிஎல் தொடரிலும் தனது சதத்தை அடித்திருக்கிறார்.

இவர் பெரிய அளவில் சாதிக்காத பொழுதே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இவர் பயிற்சி செய்யும் விதத்தை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார். தற்பொழுது கில் நேற்று சதம் அடித்த பிறகு விராட் கோலி மிக முக்கியமான செய்தி ஒன்றை அவருக்காக வெளியிட்டு இருக்கிறார். 

அதில் “கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது. அடுத்த தலைமுறையை நீங்கள் தொடர்ந்து சென்று வழி நடத்துங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்று கூறியிருக்கிறார். அடுத்த விராட் கோலி கில்தான் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விராட் கோலியும் அதை ஆமோதிப்பது போல வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பது மிகவும் ஆச்சரியமான மற்றும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது.

விராட் கோலி பற்றி கில் கூறும் பொழுது,  “நான் 12, 13 வயதிலிருந்து அதிகமாக விராட் கோலியைதான் பின்பற்றி வருகிறேன். அவர்தான் என் முன்மாதிரி. நான் விராட் பாயிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அவருடைய செயல்பாடுகள் எனக்கு மிகவும் உந்துதலாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை