கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் - சோஃபி டிவைன்!
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூஸி பேட்ஸ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டுவைன், அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹு உள்ளிட்டோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இவர்கள் மூவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்ற பிறகு, மூத்த ஆல்ரவுண்டர் சோஃபி டெவின், பரபரப்பான கிரிக்கெட் அட்டவணை எதிர்பார்த்ததை விட தன்னை மிகவும் கடுமையாக பாதித்ததாகவும், விளையாட்டிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலையை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் டபிள்யூபிஎல் தொடரில் இருந்தும் சோஃபி டிவைன் விலகி இருந்தது குறிப்பிடத்தக்காது.
இதுகுறித்து பேசிய சோஃபி டிவைன், “கிரிக்கெட்டில் இருந்து நான் கொஞ்சம் விலகி இருக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு தள்ளப்பட்டேன். கடந்த 12-18 மாதங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரியதாக இருந்திருக்கலாம், ஆனால் ஒயிட் ஃபெர்ன்ஸ் குழுவும், நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டின் அளவு, உலகக் கோப்பையை வென்றது போன்ற விஷயங்களும் என்னுடைய அழுத்தத்தை அதிகரித்திருக்கலாம். நான் உணர்ந்ததை விட இது என்னை கொஞ்சம் அதிகமாக பாதித்தது.
நியூசிலாந்து கிரிக்கெட், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரின் ஆதரவுடன், அந்த நேரத்தை ஒதுக்கி வைக்க முடிந்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மன ஆரோக்கியம் மற்றும் நீங்கள் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்வது எனக்கு மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். மேலும் ரசிகர்களிடம் இருந்தும் எனக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி கூறிகொள்கிறேன். இதன்மூலம் எனக்கு சிறிது நேரம் செலவிடவும் முடிந்தது, அது நன்றாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமான சோஃபி டிவைன் இதுவரை 152 ஒருநாள் மற்றும் 143 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 9 சதங்கள், 37 அரைசதங்கள் என 7,300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளதுடன், 224 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதுதவிர்த்து இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி கடந்தாண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து மகளிர் டி20 அணி: சூஸி பேட்ஸ், ஈடன் கார்சன், சோஃபி டிவைன், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, பாலி இங்கிலிஸ், பெல்லா ஜேம்ஸ், ஃபிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், அமெலி கெர், ரோஸ்மேரி மெய்ர், ஜார்ஜியா பிளிம்மர், லியா தஹுஹு.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய மகளிர் டி20 அணி: தஹ்லியா மெக்ராத் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், டார்சி பிரவுன், நிக்கோல் ஃபால்டம், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்