கில்லிற்கு கேப்டன் பதவி வழங்கியது சரியான முடிவாக தோன்றவில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!

Updated: Thu, Nov 30 2023 09:50 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

அந்த வகையில் 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ், “குஜராத் டைட்டன்ஸ் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கேன் வில்லியம்சன் பெயரை பார்த்ததும், அடுத்து அவரை தான் கேப்டனாக கொண்டு வருவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் ஷுப்மன் கில்லை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார்கள். அவருக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். அவருக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசனும் அமைய வேண்டும்.

அவர்கள் அவரை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள். இது பலன் அளிக்கவும் செய்யலாம். நான் இதை முழுமையாக தவறு என்று சொல்லவில்லை. கில் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு 2025 ஆம் ஆண்டு கேப்டனாக வரலாம் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் அவர் அடுத்து எப்படி விளையாடுவார் அணியை முன்னின்று வழிநடத்துவார் என்று பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை