Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2024 Dream11 Team: இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இந்த வெற்றியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கிய என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

GT vs CSK: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

GT vs CSK, Pitch Report

நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இங்கு களத்தில் நின்று விளையாடும் பேட்ஸ்மேன் பெரிய இன்னிங்ஸை விளையாடலாம். மேலும் இங்கு பெரிய எல்லைகள் இருப்பதால், பந்துவீச்சாளர்கள் எப்போதும் விளையாட்டில் இருப்பார்கள். இந்த மைதானத்தில் டி20 வடிவத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

GT vs CSK Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 06
  • குஜராத் டைட்டன்ஸ் - 03
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 03

GT vs CSK: Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Gujarat Titans vs Chennai Super Kings Probable Playing XI

Gujarat Titans Probable Playing XI: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், மானவ் சுதர், மோஹித் சர்மா, நூர் அகமது, ஜோசுவா லிட்டில்.

Advertisement

Chennai Super Kings Probable Playing XI: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மகேந்திர சிங் தோனி, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, ரிச்சர்ட் க்ளீசன்.

GT vs CSK, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், டேரில் மிட்செல், ஷிவம் துபே, ஷுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன்
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், ஜோசுவா லிட்டில், துஷார் தேஷ்பாண்டே.

GT vs CSK Dream11 Prediction, Today Match Prediction, Today Match GT vs CSK, GT vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, GT vs CSK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Gujarat Titans vs Chennai Super Kings

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News