ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும், அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 13 போட்டிகளில் 9 வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில்ல் நீடித்து வருகிறது. இருப்பினும் அந்த அணி கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள காரணத்தால் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது.

அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் ஷாருக் கானுன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்திவுள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சாய் கிஷோர், பிரஷித் கிருஷ்ணா ரன்களை கட்டுப்படுத்தும் நிலையில் மற்ற வீரர்கள் அழுத்தத்தில் உள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 10 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் தொடர்கிறது. இதன் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்தும் முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனால் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தை வெற்றிப் பதிவுசெய்யும் முனைப்பில் அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. 

அணியின் பேட்டிங்கில் உர்வில் படேல், அயூஷ் மாத்ரோ உள்ளிட்ட இளம் வீரர்களுடன் டெவால்ட் பிரீவிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மதீஷா பதிரானா ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், டெவால்ட் பிரீவிஸ், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, மத்திஷா பத்திரனா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 07
  • குஜராத் டைட்டன்ஸ் - 04
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 03

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர்
  • பேட்ஸ்மேன்கள் - சாய் சுதர்ஷன் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள் - பிரசித் கிருஷ்ணா, நூர் அகமது, முகமது சிராஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News