ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையிலும், அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இத்னால் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்லது. 

அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பட்லர் லெவனில் இடம்பெறாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்கக்ப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சாய் கிஷோர், பிரஷித் கிருஷ்ணா ரன்களை கட்டுப்படுத்தும் நிலையில் மற்ற வீரர்கள் அழுத்தத்தில் உள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), குசால் மெண்டிஸ், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Advertisement

மும்பை இந்தியன்ஸ்

மறுபக்கம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியதுடன், 6அவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டிய முயற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது.

அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பண்டியா, தீலக் வர்மா, நமன் தீர் ஆகியோருடன் ஜானி பேர்ஸ்டோவும் அணியில் இனைந்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பந்துவீச்சிலும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரும் அபாரமான ஃபார்மில் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று, தங்களின் ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ஜானி பேர்ஸ்டோவ், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சரித் அசலங்கா, நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 07
  • குஜராத் டைட்டன்ஸ் – 05
  • மும்பை இந்தியன்ஸ் - 02

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- குசால் மெண்டிஸ், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர் - ஹார்டிக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News