இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றும் காணும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

ஷுப்மன் கில் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது. அணியின் பேட்டிங்கில் ஷுபம்ன் கில், விருத்திமான் சஹா, சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், விஜய் சங்கர் போன்ற வீரர்கள் இருந்தாலும், அவர் இதுவரை பெரிதளவில் சோபிக்க தவறிவருவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் நூர் அஹ்மத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அவருடன் மோஹித் சர்மா தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இவர்களுடன் ரஷித் கான், உமேஷ் யாதவ், அஸ்ஹ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரும் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

மறுபக்கம் ஷிகர் தவான் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் போட்டியில் சிறப்பான வெற்றியையைப் பதிவுசெய்திருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். கடந்த போட்டியில் அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் சாம் கரண், அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் காகிசோ ரபாடா, ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்களது ஃபார்மிற்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை ஈட்டும். ஏற்கெனெவே அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ள அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட்

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இங்கு களத்தில் நின்று விளையாடும் பேட்டர்கள் பெரிதளவில் ரன்களைக் குவிக்கலாம். மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் எப்போது வேண்டுமானாலும் விளையாட்டில் கம்பேக் கொடுப்பார்கள். மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக உள்லது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • குஜராத் டைட்டன்ஸ் - 02
  • பஞ்சாப் கிங்ஸ் - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில் (கே), விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், உமேஷ் யாதவ், நூர் அகமது, மோஹித் சர்மா, தர்ஷன் நல்கண்டே.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: விருத்திமான் சாஹா, ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்டர்ஸ்: ஷிகர் தவான், ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன்
  • ஆல்-ரவுண்டர்கள்: சாம் கரண்(துணை கேப்டன்), அஸ்மத்துல்லா ஓமர்சாய், லியாம் லிவிங்ஸ்டோன்
  • பந்துவீச்சாளர்கள்: மோஹித் சர்மா, ரஷித் கான், நூர் அகமது

GT vs PBKS IPL 2024 Dream11 Prediction, Today Match GT vs PBKS, GT vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, GT vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Gujarat Titans vs Punjab Kings

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News