WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Tue, Mar 05 2024 22:25 IST
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால், தங்களது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணி  - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 02
  • குஜராத் ஜெயண்ட்ஸ் - 01

உத்தேச லெவன்

குஜராத் ஜெயண்ட்ஸ்: லாரா வோல்வார்ட், பெத் மூனி (கே), ஆஷ்லே கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கேத்ரின் பிரைஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தயாளன் ஹேமலதா, தனுஜா கன்வெர், தரனும் பதான், மேக்னா சிங், மன்னத் காஷ்யப்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஸ்மிருதி மந்தனா (கே), சப்பினேனி மேகனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி டிவைன், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஏக்தா பிஷ்ட், சிம்ரன் பகதூர், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: பெத் மூனி, ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: ஸ்மிருதி மந்தனா, சப்பினேனி மேகனா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன், எலிஸ் பெர்ரி (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர் (துணை கேப்டன்), கேத்ரின் பிரைஸ்
  • பந்துவீச்சாளர்கள்: ஜார்ஜியா வேர்ஹாம், தனுஜா கன்வர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை