ஹர்பஜன், ஜவகலுக்கு எம்சிசியின் சிறப்பு கவுரவம்!

Updated: Wed, Oct 20 2021 12:22 IST
Image Source: Google

லண்டனில் உள்ள லாா்ட்ஸ் மைதானத்திலிருந்து இயங்கி வரும் மெல்போா்ன் கிரிக்கெட் கிளப் தான், கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிகளை வகுத்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிளப்பில் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பது கிரிக்கெட் வீரர்களுக்கான தனி அங்கிகாரமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்தியாவின் இந்தியாவின் ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மெல்போா்ன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதேபோல் இங்கிலாந்தின் அலாஸ்டா் குக், இயான் பெல், மாா்கஸ் டிரெஸ்கோதிக், சாரா டெய்லா், தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா, ஹொ்ஷெல் கிப்ஸ், ஜேக்ஸ் காலிஸ், மோா்னே மோா்கெல், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பிளாக்வெல், டேமியன் மாா்டின், வெஸ்ட் இண்டிஸின் இயான் பிஷப், ஷிவ்நரைன் சந்தா்பால், ராம்நரேஷ் சா்வான், இலங்கையின் ரங்கனா ஹெராத், நியூஸிலாந்தின் சாரா மெக்கிளஷான் ஆகியோருக்கும் கிரிக்கெட்டில் அவா்கள் செய்த சிறந்த பங்களிப்புக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை