இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. அடுத்ததாக டி20 தொடர் நடக்கவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை ஈடன் கார்டனில் நடைபெறுகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த டி20 தொடரில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும். இஷான் கிஷனை ஓபனிங்கிற்கு தயார்படுத்தவெல்லாம் தேவையில்லை. அவர் ஏற்கனவே தயாராகத்தான் இருக்கிறார். 

எனவே அவரை அணியில் கண்டிப்பாக சேர்த்து, ஓபனிங்கில் இறக்கிவிட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் ராகுலால் 5ஆம் வரிசையில் பேட்டிங் ஆடமுடியும் என்றால், டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஏன் முடியாது.

ஒருநாள் போட்டிகளில் பின்வரிசையில் இறங்கி பெரிய ஷாட்டுகளை ஆடவல்லவர் கேஎல் ராகுல். பவர் பிளேயில் இஷான் கிஷன் மாதிரியான பயமற்ற வீரர் பேட்டிங் ஆடுவது அணிக்கு நல்லது” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல்லில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்குவதற்காகத்தான் இஷான் கிஷனை ஏலத்தில் ரூ.15.25 கோடி கொடுத்து  மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News