இது ஒரு முட்டாள்தனமான கேள்வி - பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை விமர்சித்த ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, இந்திய அணி மீதும், வீரர்கள் மீதும் ட்ரோல்களுக்கு பதில் அளிப்பதற்கும் தயங்குவதில்லை. இந்நிலையில் தான் பாகிஸ்தானைச் பத்திரிக்கையாளர் ஒருவரை ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் கண்டித்துள்ளார். அதன்படி உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டரான மகேந்திர தோனியை, பாகிஸ்தான் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பு இருந்தார் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஃபரீத் கான்.
இந்நிலையில் அவரின் பதிவிற்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். மேலும், ரிஸ்வானின் பேட்டிங்கைப் பாராட்டிய ஹர்பஜன் சிங், உலக கிரிக்கெட்டில் தோனி இன்னும் நம்பர் ஒன் என்பதால் இதுபோன்ற ஒப்பீடுகளைத் தவிர்க்கிறேன் என்றும், ரிஸ்வானைக் கேட்டால் அவரும் அதையே சொல்வார் என்றும் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது பதிவில், “இப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. இந்தக் கேள்வியை ரிஸ்வான் இடம் கேட்டால் கூட அவரே உண்மையான பதிலை சொல்லி விடுவார்.
ரிஸ்வான் ஒரு நல்ல வீரர் தான். எனக்கும் அவரை பிடிக்கும். எப்போதும் வெற்றிக்காக ஆட வேண்டும் என நினைப்பவர். ஆனால், இது போன்ற ஒப்பீடு மிகவும் தவறானது. தோனி இன்னும் உலக கிரிக்கெட்டில் நம்பர் 1 தான். ஸ்டம்புகளுக்குப் பின்னால் அவரை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை” என தனது பதிவில் தெரிவித்துள்ளார். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் அவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக தோனி கருதப்படுகிறார், அவர் தனது கேப்டன்சியின் கீழ் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, தனது தலைமையின் கீழ் 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் ஈர்த்தார். அதன்பிறகு நடைபெற்ற 2011ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர், அதன்பின் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மேற்கொண்டு உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவும் தகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.