இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!

Updated: Tue, Jul 11 2023 22:20 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகளும், 5 டி20 போட்டிகளும் நடக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி இரண்டு வாரங்களுக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் சென்று தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.

அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், முகேஷ் குமார், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இருக்கின்றனர். ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் ஓப்பனிங் இடத்திற்கு கில், இஷான் கிஷன், ருத்துராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கின்றனர். யார் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும்? பிளேயிங் லெவனில் யார் யார் இருக்கவேண்டும்? என்கிற கணிப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஓப்பனிங்கில் கில் அல்லது ஜெய்ஸ்வால் இருவரில் யார் களமிறங்க வேண்டும்? பிளேயிங் லெவன் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மாவுடன் ஓபனிங்கில் சுப்மன் கில் களமிறங்க வேண்டும். அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த இடத்தை தக்க வைத்திருக்கிறார். கடுமையான போட்டிக்குப் பிறகு தொடர்ந்து ஓப்பனிங்கில் இறங்கி வருகிறார். 

அவருடைய இடத்தை யாரும் கை வைக்கக்கூடாது. ஜெய்ஸ்வால் 3ஆவது இடத்தில் களமிறங்கி பயன்படுத்த வேண்டும். சிறப்பான பார்மை பயன்படுத்தக்கூடாது. 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களில் விராட் கோலி, ரஹானே இருவரும் இறங்கவேண்டும். 6ஆவது இடத்தில் ஜடேஜா களமிறங்குவது சரியாக இருக்கும்.

அஸ்வின் 7ஆவது இடத்தில் வந்தால், கேஎஸ் பரத் 8ஆவது இடத்திற்கு வருவது சரியாக இருக்கும். 9ஆவது இடத்தில் சிராஜ், 10ஆவது மற்றும் 11ஆவது இடத்தில் உனாத்கட் மற்றும் முகேஷ் குமார் இருவருக்கும் கொடுக்க வேண்டும். இருவரும் முதல்தர கிரிக்கெட்டில் நன்றாக செயக்கப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தேர்வ்வு செய்த பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎஸ் பரத், முகமது சிராஜ், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை