கூடிய விரைவில் பாண்டியா பந்துவீசுவார் - ரோஹித் நம்பிக்கை!

Updated: Sat, Oct 09 2021 12:31 IST
Image Source: Google

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா 2018ஆம் ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பந்து வீசாமல் அணியில் பேட்ஸ்மேனாக நீடித்து வருகிறார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டியா நிச்சயம் பந்து வீசினால் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனால் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் இதுவரை பந்து வீசாமல் இருந்து வருகிறார்.

அவரது இந்த விவகாரம் தற்போது இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பந்து வீசாமல் அணியில் நீடிப்பது கடினம் என்றும் நிச்சயம் அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதும் இந்திய அணியின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாண்டியாவின் பந்து வீச்சு குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை பாண்டியா ஒரு பந்து கூட முடியவில்லை. மேலும் இந்த தொடரில் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவே எங்களது அணியில் விளையாடி வருகிறார். பாண்டியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை கூற வேண்டுமென்றால் இந்த தொடர் முழுவதுமே அவர் பந்து வீசாமல் இருந்து வருகிறார். 

அவரது உடல்நிலையை மருத்துவர்கள், ட்ரைனர்கள், பிசியோ என அனைவரும் கவனித்து வருகின்றனர். மேலும் அவருடைய பந்து வீச்சிற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும் என்பதிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவர் பந்து வீசவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அவருடைய உடற்தகுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதினால் நிச்சயம் உலக கோப்பை தொடரின் போது அவரால் பந்துவீச முடியலாம். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆனால் இது குறித்த தெளிவான முடிவை மருத்துவர்கள் மற்றும் பிசியோ ஆகியோர் தான் கூறவேண்டும். என்னை பொறுத்தவரை பாண்டியா அடுத்த வாரத்திற்குள் பந்துவீசும் அளவிற்கு தயாராகி விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை