இந்திய கிரிக்கெட் அணியின் தலைச் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ளார்

Advertisement

இதனால் இந்திய கிரிக்கெட் அணியிலும் சரி, மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சரி ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் இல்லை. அவருக்கு மாற்றாக தமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். இதனால் இந்திய அணியில் புதிய ஆல் ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் உருவெடுத்துள்ளார். 

Advertisement

ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் தம்மை அணியில் சேர்க்க வேண்டாம் என்று தேர்வுக் குழுவினருக்கு ஹர்திக் பாண்டியா கோரிக்கை வைத்தார். இதனை எற்று கொண்ட தேர்வுக்குழு, பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ள வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான தொடருக்குள் தயாராகவேண்டும் என்று கெடு விதித்தது.

இந்த நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் விளையாட மாட்டேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத. பழைய மாதிரி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பட முடியும் என்று தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

அணியில் இடம் கிடைக்காத போது, ஒரு வாய்ப்பு கொடுத்தால் ஹர்திக் இப்படி கூறிவிட்டாரே என்று தேர்வுக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் என்பதால், அவர் போட்டியில் பங்கேற்காமல் உள்ளாரே என்று பிசிசிஐயில் உள்ள நிர்வாகிகளும் கடுப்பில் உள்ளனர். ஆனால், ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக மட்டும் தான் அணிக்கு தேவை என்பதால்,அவரது கூற்றில் நியாயம் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News